நிஜாமுதீன்-சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்

சென்னை: ஹஜ்ரத் நிஜாமுதீன்- சென்ட்ரல் இடையே ராஜதானி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நிஜாமுதீன்- சென்னை சென்ட்ரல் இடையே ராஜதானி சிறப்பு ரயில் (02434) டிசம்பர் 30ம் தேதி முதல் பிற்பகல் 3.35 மணிக்கும், சென்னை சென்ட்ரல்- நிஜாமுதீன் இடையே ராஜதானி சிறப்பு ரயில் (02433) ஜனவரி 1ம்தேதி முதல் காலை 6.05 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>