நாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு

வாஷிங்டன், :அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜோ பிடன் (78) வெற்றிப் பெற்றார். அவர், வருகிற ஜனவரி முதல் வாரத்தில் நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மருத்துவக் குழு அவரை கவனித்து வருகிறது.

இதுகுறித்து  அவரின் மருத்துவர் கெவின் ஓ’கானர் கூறுகையில், ‘பிடன் தனது செல்ல நாயுடன் விளையாடும்போது, அவரது கால் நழுவியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆரம்பத்தில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது எலும்பு முறிவு தென்படவில்லை. ஆனால், கூடுதல் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மயிரிழையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என்றார்.

Related Stories:

>