×

அலங்காநல்லூர் பகுதியில் மழை: அறுவடை நேரத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்

அலங்காநல்லூர்: மதுரை அலங்காநல்லூர் - அச்சம்பட்டி செல்லும் சாலை ஓரத்தில் அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே இருந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்திருப்பது, விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளந்திரி பாசனப்பகுதிகளில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு முதல்போக சாகுபடிக்காக வைகை, பெரியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக சாய்ந்து சேதமடைந்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு, அறுவடை காலத்தில் பெய்த பருவமழை பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விவசாயத்திற்காக தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி கடனில் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு செய்துள்ள விவசாயம் நல்ல மகசூலை தந்து வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தி ஏலத்தில் இருந்து நகைகளையும், சொத்துக்களையும் காப்பாற்றி விடலாம் என்ற விவசாயிகளின் நம்பிக்கை தற்பொழுது வீணாகியுள்ளதாக கண் கலங்கினர்.

கதிர் முற்றி விளைச்சலுக்கு தயாரான நிலையில் மழையினால் சாய்ந்து சேதமடைந்த நெற்பயிர்கள் வேளாண்மைத் துறையினர்பயிர் காப்பீடு செய்தால்தான் இழப்பீடு கிடைக்கும் என்றும், பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு
கிடையாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது விவசாயிகளை மேலும் துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது. எனவே, மத்திய - மாநில அரசுகள் விவசாயத்திற்காக தேசிய மற்றும் கூட்டுறவு சங்க விவசாய கடன் இந்த பருவகாலத்தில் ஏற்பட்ட பயிர்சேத இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Alankanallur , Rain, paddy
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...