அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புதிய மின்னணு இன்டர் லாக்கிங் தொழில்நுட்ப சேவை

சென்னை: அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புதிய மின்னனு இன்டர் லாக்கிங் மற்றும் விஷுவல் டிஸ்பிளே யூனிட் தொழில்நுட்ப சேவையை தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புதிய மின்னனு இன்டர்லாக்கிங் தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விஷுவல் டிஸ்ப்ளே யூனிட் என்ற புதிய கருவியும் அதே நாளில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னனு இன்டர்லாக்கிங்  என்பது சிக்னல் மற்றும் பாயிண்ட்கள் இடையே ஒரு கணினி மயமாக்கப்பட்ட கம்பியில்லா மென்பொருள் தொழில்நுட்பம் ஆகும்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்தை கூடுதல் பாதுகாப்புடன் கட்டுப்படுத்த முடியும். இதனால் அத்திப்பட்டு ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள  காமராஜர் துறைமுகம், செட்டிநாடு சிமெண்ட், ஜுவாரி சிமெண்ட், என்சிடிபிஎஸ் நிலக்கரி சைடிங் போன்றவற்றில்  தடையில்லா சரக்கு போக்குவரத்து சேவையை அளிக்க முடியும். மேலும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய ரயில் சேவை முனையமாக அத்திப்பட்டுக்கு பதிலாக இனி அத்திப்பட்டு புதுநகர் சேவையாற்றும். இதன் மூலம் இன்ஜின் மாற்றி சரக்கு ரயில்களை  எடுத்துச் செல்லும் நேர விரயம் தவிர்க்கப்படும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>