காங். பொருளாளராக பன்சால் நியமனம்: பொதுச்செயலாளர் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலை நியமித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேல் கடந்த 25 தேதி மரணம் அடைந்தார். இதனால் கட்சியில் பொருளாளர் பதவி காலியானது. இந்தநிலையில், பொருளாளரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இடைக்கால நடவடிக்கை என்ற அளவில் புதிய பொருளாளராக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக பொருளாளர் பதவியை தலைவர் சோனியாகாந்தி வழங்கி இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

புதியதாக பொருளாளராக நியமிக்கப்பட்ட பன்சால், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்ேபாக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார். ஆனால், ரயில்வே துறையின் முறைேகடு காரணமாக அவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த இவர், மத்திய நிதி அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர், நீர்வள அமைச்சகம் என பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மோதிலால் வோராவுக்கு பதிலாக கட்சி நிர்வாகத்தின் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இப்போது, ​​பொருளாளர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>