2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் ஆடுவேன்: சாய்னா நேவால் நம்பிக்கை

ஐதராபாத்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (30). ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் சர்வதேச போட்டிகளில் பலபட்டங்களை வென்றுள்ளார்.2012ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்தார். சக வீரரான காஷ்ய்ப்பை கடந்த 2018 டிசம்பர் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அண்மையில் கணவருடன் மாலத்தீவுக்கு விடுமுறையை கழிக்கச்சென்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். கடந்த ஒரு ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் மீண்டும் பேட்மிண்டன் களம் காண உள்ளார்.

அடுத்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகிறார். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பங்கேற்பேன் என நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது சர்வதேச தரவரிசையில் 22வது இடத்தில் இருக்கும் சாய்னா, ஒலிம்பிக்கில் ஆடுவது அனைவரின் கனவு.இது மிகப்பெரிய விஷயம். ஆனால் அதற்கு முன் பல போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். முதல் 20 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளை வெல்ல வேண்டும். அதற்கு முன் 2, 3 மாதம் பயிற்சி உள்ளது. தொடர்ந்து 7,8 போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்பிறகு தான் ஒலிம்பிக் பற்றி சிந்திப்பேன்.

ஆனால் நான் நிச்சயம் பந்தயத்தில் இருக்கிறேன். நான் நன்றாக செயல்பட விரும்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். நான் விளையாடுவதை நிறுத்த வேண்டும், என்னால் இனி வெல்ல முடியாது என்று உணர்ந்த நேரங்களும் இருந்தன. ஆனால் நான் அதைத் தள்ள முடியும் என்று நினைத்தேன். நான் போராட விரும்புகிறேன். நான் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வேன். இது என் வாழ்க்கை(பேட்மிண்டன்), இது எனது வேலை, என்றார்.

Related Stories:

>