×

2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி ஆட்டம்

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 390 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் காலை 9.10க்கு தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபின்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக, ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 77 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச்  69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்னல் லாபஸ்சாக்னே 61 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தும், ஹென்ரிக்ஸ் 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமால் விளையாடினர்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 389 ரன்கள் ஆஸ்திரேலிய அணி எடுத்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்ற நிலையில் இப்போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்கவுள்ளது.


Tags : India ,Australia ,match ,Steve Smith Action , 2nd ODI: Australia set 390 for India: Steve Smith in action
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!