சிவகாசி நகராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு

சிவகாசி: சிவகாசி நகராட்சி 26வது வார்டு பகுதியில் காளியப்பா நகர், அ.சி.காலனி, தட்டாவூரணி, ஜக்கம்மாள் கோயில் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் வாறுகால், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்படுகின்றர்.இந்த பகுதியில் குப்பைக்கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை. இதனால் மக்கள் விளாம்பட்டி சாலையில் குப்பைக்கழிவுகளை கொட்டியுள்ளனர். மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவை நகராட்சி சுகாதார துறையினர் முறையாக அகற்றாததால் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தட்டாவூரணி சிவகாசி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பன்றிகள் அனுமதியின்றி வளர்க்கின்றனர்.

அவை அருகில் உள்ள குப்பைக்கழிவுகளை கிளறி அங்கேயே வசித்து வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா பரவும் ஆபத்து உள்ளது. நகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள தட்டாவூரணியில் பன்றிகள் பண்ணைப்போல் கூட்டம், கூட்டாக திரிகின்றன. பன்றிகள் சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் நோய் பரவும் ஆபத்து உள்ளது. காளியப்பா நகரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால் பகல் நேரங்களில் கூட வீடுகளை மக்கள் பூட்டியே வைத்துள்ளனர். எனவே, சிவகாசி நகராட்சி நிர்வாகம் குப்பைக்கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>