×

மக்கள் வருகை சரிவால் பள்ளிபாளையத்தில் வெறிச்சோடிய சந்தை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் சனிச்சந்தையும், அக்ரஹாரம் பகுதியில் புதன்சந்தையும் வாரத்தில் ஒருநாள் கூடும்.இவ்விரு சந்தைகளிலும் தொழிலாளர்களின் கூட்டம் மொய்க்கும். ஆடு -கோழி தவிர அனைத்து பொருட்களும் இங்கு கிடைப்பதால், மாலை 6 மணிக்கு மேல் கூட்டம் அலைமோதும். கொரோனா ஊரடங்கு நிலையிலும் இவ்விரு சந்தைகளும் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து, தினசரி சந்தையாக ஒருமாத காலம் இயங்கியது. முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதும் இரண்டு சந்தைகளும் மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக சந்தைகள் மூடிய நிலையில் காணப்பட்து.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் அறிவிப்பை தொடர்ந்து, நேற்று சனிச்சந்தை கூடியது. லேசான மழையால் சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தது. மாலை 6 மணிக்கு மேலும் சுறுசுறுப்பு ஏற்படவில்லை. இதனால், காய்கறிகள் விற்பனை டல் அடித்தது. இனி வழக்கம் போல இரண்டு சந்தைகளும் இயங்குமென நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென கருதப்படுகிறது. நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில், நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. நாமக்கல் நகரை பொறுத்தவரை, நேற்று காலை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால், உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் வெகுவாக நேற்று குறைந்து விட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன், 7 மாதத்துக்கு பின்னர்  உழவர்சந்தை திறக்கப்பட்டது.

 இதனால், டூவீலர்கள் உழவர் சந்தைக்குள் வர தடை விதிக்கப்பட்டு, பூங்கா சாலையில் நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டன. மேலும், சந்தையில் இங்கிலிஸ் காய்கறிகள் விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கப்பட்டது. உழவர்சந்தை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் அலுவலகத்துக்குள் நேரடியாக செல்லமுடியாத அளவு ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாயிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரும்படி அலுவலர்கள் அறிவுறுத்தினர்.   நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: எருமப்பட்டி-10, மோகனூர்- 5, நாமக்கல்- 4, பரமத்திவேலூர்- 18, சேந்தமங்கலம்- 15, திருச்செங்கோடு- 37, கலெக்டர் அலுவல வளாகம்- 7, கொல்லிமலை- 12 மில்லி மீட்டர்.


Tags : Desolate market at the drop-in pallipalayam
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!