நிவர் புயலால் 8 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி பயணம்

ராமேஸ்வரம்: நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, 8 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 800க்கும் அதிகமான விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டன. நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, பாக்ஜலசந்தி கடலில் இயல்புநிலை திரும்பியது.

இதையடுத்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன் பிடிக்க செல்ல நேற்று முன்தினம் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அனுமதி டோக்கன் வாங்கிய 400க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், ஐஸ்கட்டி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை படகில் ஏற்றி கொண்டு மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.  8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories:

>