கார்த்திகை தீப திருநாள்: அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதம் கார்த்திகை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வரும் கார்த்திகை தீப விழாவினை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வீடுகளிலும் தீப விளக்கால் விளக்கேற்றி கொண்டாடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படவுள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>