×

இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை: காலை 11 மணிக்கு மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை.!!!

டெல்லி: கொரோனா பாதிப்புக்கு இடையே மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். கடந்த 2014ம்  ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன்  உரையாற்றும் வகையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி  தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியை 2019 ஜூன் 30-ம் தேதி மீண்டும் தொடங்கினார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார்.

இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். இன்று திருக்கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருக்கார்த்திகை தீபம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 71-வது முறையாக உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Narendra Modi ,speech ,Mann Ki Baat , Today is the last Sunday of the month: Prime Minister Narendra Modi's speech at Mann Ki Baat at 11 am !!!
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...