×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று மகா தீப பெருவிழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நேற்று காலை தீபக்கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும், தீபம் ஏற்றுவதற்கான ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றை, இன்று காலை மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவும், மலைக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதை தடுக்க 15 சாலை சந்திப்புகளில் செக்போஸ்ட் போடப்பட்டுள்ளது.  வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில், 4 டிஐஜிகள், 8 எஸ்பிக்கள் உள்பட 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறை:

* 17.11.2020 அன்று தூர்க்கை அம்மன் உற்சவததில் தொடங்கி 3.12.2020 அன்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

* 20.11.2020 அன்று அருணாசலேஸ்வரார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும்

* 10-ம் நாள் 29.11.2020 அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4. மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

* கொரோனா நோய் தடுப்பு நை்முறையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி  வரை பக்தர்களுக்கு கொரோனா வழிகாட்டுதலின்படி தரிசனத்துக்கு அனுமதி.

* வார நாட்களில் சுமார் 4000 முதல் 5000 பக்தர்கள், விடுமுறை மற்றும் இறுதி நாட்கள், பெளர்மணி, அமாவாசை மற்றும் பண்டிகை போன்ற நாட்களில் சுமார் 8000 பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதி.

* தற்போது நடைபெற உள்ள தீபத்திருநாளில் 17.11.2020 முதல் 03.12.2020  வரை 29.11.2020 தீபத் திருநாள் தவிர தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு சவாமி தரிசனம் செய்ய அனுமதி.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுக்கு வரும் www.arunachaleswawawtemple.tnhrce.in  என்ற இணையத்தளத்தில் e-registration மூலம் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து உரிய அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* 29.11.2020 அன்று பொதுமக்கள், பக்தர்கள் கோவிலில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

* இந்நிகழச்சிகள் தொலைகாட்சி, யூடியூப், திருக்கோயில் இணையத்தளம், அரசு கேபிள் தொலைகாட்சி மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் ஒளிப்பரப்பாகும்.

* தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

*  தீபத் திருவிழா நாட்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரப்போகும் பௌர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை.

* கிரிவலப் பாதை மற்றும் நகரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை.

* இந்த வருட தீபத் திருநாளன்று 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்துகள் வசதி கிடையாது.

* திருவண்ணாமலை நகரம், செங்கம் ரோடு கிரிவலப்பாதை, அரசினர் கலைக்கல்லூரி அருகே அரச புறப்போக்கு காலு மைதானத்தில் நடைபெறும் மாடு மற்றும் குதிரை சந்தை இந்த ஆண்டு நடத்த அனுமதி கிடையாது.

Tags : Thiruvannamalai Annamalaiyar Temple , Parani lamp was lit at the Thiruvannamalai Annamalaiyar Temple to mark the great light
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...