ட்வீட் கார்னர்... புதிய பயிற்சியாளர் ஒப்பந்தம்!

செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (28), மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 6வது இடத்தில் உள்ளார். 2021 சீசனில் வெற்றிகளைக் குவிக்க திட்டமிட்டுள்ள அவர் தனது புதிய பயிற்சியாளராக ஷாஷா பாஜினை (36) ஒப்பந்தம் செய்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் வீரரான இவரது பயிற்சியின் கீழ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2018 யுஎஸ் ஓபன் மற்றும் 2019 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டின் டபுள்யு.டி.ஏ சிறந்த பயிற்சியாளர் விருதை வென்றுள்ள ஷாஷா பாஜின், நட்சத்திர வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், கிறிஸ்டினா மிளாடெனோவிச், டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா ஆகியோருக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஷாஷா மற்றும் உடல்தகுதி கோச் ஆசஸ் சிம்சிச் ஆகியோருடன் உள்ள படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘டீம் பிளிஸ்கோவா 2021’ என தகவல் பதிந்துள்ளார். 2020 சீசனில் பெரிதாக சாதிக்க முடியாமல் தடுமாறிய அவருக்கு, புதிய பயிற்சியாளருடன் இணைந்துள்ளது ஏற்றத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories:

>