×

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து: பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம்

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி அங்கு தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.  கேப்டவுனில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது.  தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 58 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். வாண் டெர் டசன் 37 ரன் (28 பந்து, 3 சிக்சர்), கேப்டன் டி காக் 30 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3, ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜார்டன்  தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல்  86* ரன் (48 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 37 ரன் (27 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் மாலன் 19 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் ஜார்ஜ் லிண்டே,  லுங்கி என்ஜிடி தலா 2, டாப்ரைஸ் ஷம்சி ஒரு விக்கெட் எடுத்தனர். பேர்ஸ்டோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி இன்று பார்லில் நடக்கிறது.

Tags : England ,Burstow Action Game ,South Africa , England beat South Africa: Burstow Action Game
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்