நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2017ல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட குறைகளையும் முரண்பாடுகளையும் களைவதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான ஆணையம் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளறுபடிகளை அகற்றுவதற்கு நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். புதிதாக ஒரு ஆணையத்தை அமைத்து இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே இருந்த அடிப்படை ஊதியத்தைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>