×

மழை நீர் தேங்காமல் இருக்க புறநகர் பகுதிக்கு நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னை, தாழ்வான பகுதியாக உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பகுதியில் மழை காரணமாக அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து கனமழை பெய்கின்றபோது, தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும். அங்கு தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சியும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அரசு உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : suburbs ,announcement ,Edappadi ,Chief Minister , Permanent solution to the suburbs to prevent rainwater stagnation: Chief Minister Edappadi announcement
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்