×

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் கடந்த 4 நாட்களாக 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8,111 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,013 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 250 கனஅடியில் இருந்து நேற்று காலை முதல் விநாடிக்கு 700 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை 100.18 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 65.07 டிஎம்சியாக உள்ளது. இந்த ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.


Tags : Mettur Dam , The water level of Mettur Dam has crossed 100 feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி