சட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது?

மதுரை: மதுரை மாவட்டம், அதலையை சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் சட்ட ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்படாததால், சட்டம் தொடர்பான பல்வேறு பணிகள் பாதித்துள்ளன. சட்ட ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கவும், இழப்பீடு தொடர்பான சட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மத்திய அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.

Related Stories:

>