×

உயர் நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களுக்கான 2021ம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள்: தலைமை பதிவாளர் வெளியிட்டார்

சென்னை: உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு 2021ம் ஆண்டுக்கான பொது விடுமுறையை அறிவித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு விடுமுறை. ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 15 வரையிலும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டும், ஏப்ரல் 13ம் தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.  மே 14ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டும், ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரத்தை முன்னிட்டும், ஆகஸ்டு 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டும், அக்டோபர் 19ம் தேதி  மிலாது நபியை முன்னிட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதிவரை தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதவிர உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம் (மே 1ம் தேதி), சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. மேலும், மே 1ம் தேதி முதல் 30ம் தேதிவரை கோடை விடுமுறையும், அக்டோபர் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையும், டிசம்பர் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையும் விடப்படுகிறது.

கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம், ஜனவரி 23ம் தேதி, மார்ச் 6ம் தேதி, ஏப்ரல் 17ம் தேதி, ஜூன் 5ம் தேதி, ஜூலை 3ம் தேதி, ஆகஸ்டு 7ம் தேதி, செப்டம்பர் 4ம் தேதி, அக்டோபர் 23ம் தேதி, நவம்பர் 20ம் தேதி, டிசம்பர் 4ம் தேதி ஆகிய தேதிகளில் வரும் 10 சனிக்கிழமைகளில் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் செயல்படும். இதைதவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், குடும்பநல நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்படுகின்றன.

Tags : High Court ,Madurai Branch ,Chief Registrar ,Court Holidays for Lower Courts 2021 , High Court, Madurai Branch, Court Holidays for Lower Courts 2021: Published by the Chief Registrar
× RELATED திண்டுக்கலில் பழமையான ஆலமரத்தை வெட்ட தடை