×

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்ரில் பதிவு

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப மையத்தில், ஆய்வு செய்த பின் பிரதமர் மோடி ட்வீடரில் பதிவிட்டார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஒரு மணிநேரம் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு  இன்று காலை நேரில் சென்றார். அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ZYCOV-D’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.  ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இது குறித்து அவரது டுவிட்டரில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.  புனேவில் 3-ம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதைதொடர்ந்து தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரித்து வரும் COVAXIN கொரோனா தடுப்பூசி ஆலைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளார். இதுவரை சோதனைகளில் வெற்றிகண்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். விரைவான முன்னேற்றத்தை எளிதாக்க அவர்களின் குழு இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலுடன் நெருக்கமாக செயல்படுகிறார்கள் என கூறினார். மேலும் மராட்டிய மாநிலம் புனேவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் அஸ்ட்ரா ஜெனிகாவுடனும், இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும் இணைந்து COVISHIELD தடுப்பூசி உற்பத்தி பணியை பார்வையிட்டு வருகிறார்.


Tags : Modi ,scientists , Corona vaccine, for scientists, PM, congratulations, posted on Twitter
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...