×

வர உள்ள சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் : ஜி.கே.வாசன்

சென்னை, :தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். கூட்டத்திற்கு தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் வரவேற்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் முனவர் பாட்ஷா, திருவேங்கடம், ஜவஹர்பாபு, ரயில்வே ஞானசேகரன், ராஜம் எம்.பி. நாதன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.எம்.பிரபாகரன், சைதை நாகராஜ், மற்றும் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, அண்ணாநகர் ராம்குமார், ரவிச்சந்தின் மற்றும் நிர்வாகிகள் ஜெ.கக்கன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:மக்கள் விரும்பும் கட்சியாக தமாகா உள்ளது. வரும் தேர்தலில் தமாகா குறிப்பிட்ட தகுந்த வெற்றியை பெறும். நிவர் புயலால் தமிழகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசு எடுத்த நடடிக்கையால் உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது இன்ெனாரு புயல் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சரியான தகவலை அறிவித்து அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. புயலால் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களுக்கு வழங்க வேண்டும். கொரோனாவை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சி அரசுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து ஒரு குழு அமைத்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கூட்டணியில் ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தமாகா உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் கொடுக்க வேண்டும் என்பதை அதிமுக உரிய ஆய்வு நடத்தி, வெற்றி பெறும் இடங்களை ஒதுக்க வேண்டும். டிசம்பர் 1 முதல் டிசம்பர் 15ம் தேதி வரை சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த உள்ளோம். ஜனவரி 1ம் தேதி முதல் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : alliance ,AIADMK ,assembly elections ,GK Vasan , AIADMK, Coalition, Tamaga, to be continued, GK Vasan
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...