கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் மரணம்

புனே, கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே உடல்நல குறைவால் காலமானார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த பரத் பால்கே,  பந்தர்பூர் - மங்கள்வேதா தொகுதியில் இருந்து தேர்வானார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.  எனினும், அதற்கு பின் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.  

இதனால், அவரை புனேவில் உள்ள ரூபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. இருந்தும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.  அவரது மறைவு அதிர்ச்சி அளிப்பதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>