தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா? மெரினா திறக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரேனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு 30-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில் மேலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதராத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா குறித்து பல தளர்வுள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல் சென்னை மெரினா கடற்கரை மற்றும் சில பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்காமல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 10-ம் கட்டமாக நவ.1 முதல் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக, ஊரடங்கு முடிவுறும் காலத்தில் அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்தும் தளர்வுகள் அளிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி, அதன்பின் அறிவிப்புகள் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>