தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டி.20 போட்டி; 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

கேப்டவுன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி  வருகிறது. இரு அணிகள் இடை யே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு கேப்டவுனில்  நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது .இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டூபிளசிஸ் 58 (40பந்து), வான்டெர் டுஸ்சன் 37, கேப்டன்டிகாக் 30 ரன்எடுத்தனர். இங்கிலாந்தின் டாம் குர்ரன் 3விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம்இறங்கிய இங்கிலாந்து 19.2 ஓவரில் 5 விக்கெட்இழப்பிற்கு 183 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டம் இழக்காமல் 48 பந்தில் 9பவுண்டரி,4 சிக்சருடன்86 ரன் விளாசினார். பென்ஸ்டோக்ஸ் 37,டேவிட் மலன்19 ரன் எடுத்தனர். பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  2வது டி.20போட்டி நாளை நடக்கிறது.

Related Stories:

>