திருவில்லிபுத்தூர் அருகே கோழி பண்ணைக்குள் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் தனியார் கோழி பண்ணை ஒன்று உள்ளது. இப்பண்ணையில் நேற்று நல்ல பாம்பு ஒன்று புகுந்து கோழிகளை கொத்த முயல்வதாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துறை அதிகாரிகள் சுந்தரகுருசாமி, அந்தோணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி நல்ல பாம்பை பிடித்தனர். தொடர்ந்து அப்பாம்பை அருகேயுள்ள வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.

Related Stories:

>