முந்தைய நாள் தேதி குறிப்பிட்டு ஆவின் பால் பாக்கெட் விற்பனை: பள்ளிபாளையம் பகுதி மக்கள் அதிர்ச்சி

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், ஒருநாள் முன்னதாகவே தேதி பிரிண்ட் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள், நேற்று வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்ட ஆவின் மூலம் தினமும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து காலை மற்றும் மதியம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் எவ்வளவு நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்கள் பிரிண்ட் செய்தும், அந்த பால் எந்த வகையை சேர்ந்தது என்பதை மக்கள் அறிய பச்சை, நிலம், ஆரஞ்ச் நிற பாக்கெட்டுகளில் நிரப்பி வினியோகிக்கப்படுகிறது. குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பழைய பால் பாக்கெட்டை தவறுதலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காக, பால் விற்பனைக்கு அனுப்பும் தேதியை, ஆவின் நிறுவனம் அச்சிட்டு விற்பனைக்கு அனுப்புகிறது.

ஆனால், பள்ளிபாளையத்தில் நேற்று(27ம் தேதி) காலை  ஆவின் பால் பாக்கெட் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பால் பாக்கெட்டில் 27ம் தேதிக்கு பதிலாக, ஒரு நாள் முன்கூட்டியே 28ம் தேதி என அச்சிடப்பட்டிருந்தது.  தினமும் பால் பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் ஆவினில், மறுநாள் விற்பனைக்கு தயார் செய்த பால் பாக்கெட், 27ம் தேதி விற்பனைக்கு வந்திருப்பதை கண்டு பொதுமக்கள் குழம்பி தவித்தனர். இதுகுறித்து ஆவின் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘ஆவின் நிறுவனம் அனுப்பும் பால் பாக்கெட்டில் தயாரிப்பு தேதி இருக்கும் இடத்தில், ஒருநாள் முந்தைய தேதியே அச்சிடப்பட்டுள்ளது. இதுஅடிக்கடி நடக்கிறது. பொதுமக்கள் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. இதுகுறித்து பலமுறை ஆவின் நிறுவனத்திற்கு முறையிட்டும், ஒரு பயனும் இல்லை. இதுபோன்று விற்பனைக்கு அனுப்புவது நுகர்வோர் சட்டப்படி தவறு. இதை அரசு நிறுவனமே செய்வது தான் அதிர்ச்சியாக உள்ளத’ என்றனர்.

Related Stories:

>