3 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் சமுதாய கூட கட்டுமான பணிகள்

ஈரோடு: ஈரோட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் சமுதாய கூட கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஈரோடு பெரியார் நகர், மாணிக்க விநாயகர் கோவில் வீதியில் மாநகராட்சி சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு தளங்களுடன் கூடிய சமுதாய கூடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் கட்ட தீர்மானிக்கப்பட்ட நிலையில், ரூ.70 லட்சம் மதிப்பிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள பணிகளை முடிக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து 3 ஆண்டுகளாக பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், இந்த கட்டிடம் தற்போது இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருவதாக குற்றம் சாட்டி உள்ள அப்பகுதி மக்கள் பணிகளை முழுமையாக முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>