×

உறைபனி விழுவதில் தாமதம் பசுமையாக காட்சி அளிக்கும் தேயிலை தோட்டங்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் தேயிலை தோட்டங்கள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் நீர் பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாாதம் இறுதி வாரம் முதல் உறைப்பனி விழத்துவங்கும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் இந்த உறைப்பனி தாக்கம் காணப்படும். இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகள் அனைத்தும் கருகி விடும். அதேபோல், வனங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களும் பாதிக்கும். ஆனால், இம்முறை இதுவரை உறைபனி விழவில்லை. பொதுவாக நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும்.

ஆனால், தற்போது நாள் தோறும் மேக மூட்டம் காணப்படுவதால், உறைப்பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் உள்ள தேயிலை செடிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. மேலும், மலை காய்கறிகள் மற்றும் வனங்களும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேசமயம் உறைபனி விழ தாமதம் ஏற்படும் நிலையில், டிசம்பர் மாதம் துவக்கம் முதல் அதிகளவு உறைப்பனி கொட்டி விடுமோ, இதனால் முழுமையாக தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகள் பாதிக்குமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

Tags : Tea gardens , Frost, foliage, tea gardens
× RELATED வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்