புலிவலம் ஊராட்சியில் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஊராட்சி தலைவர் : பொதுமக்கள் பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 34 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் திமுகவை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளனர். இந்நிலையில் புலிவலம் ஊராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த காளிமுத்து (62) என்பவர் பதவி வகித்து வருகிறார். மேலும் இந்த ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் புலிவலம் கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, காந்தி நகர், கமலக்கண்ணி நகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் இருந்து வருகின்றன.

மேலும் இந்த ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 14 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை காலம் துவங்கியுள்ளதையடுத்து டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்காக ஊராட்சிமுழுவதும் கொசு மருந்துகள் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, கமலக்கண்ணி நகர் உட்பட பல்வேறு இடங்களில் ஸ்பிரேயர் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை பெரிதும் பாராட்டினர்.

Related Stories:

>