×

வைகையாற்றில் ஆளுயரத்திற்கு பொங்கி நின்ற நுரை : மதுரையில் பரபரப்பு

மதுரை : மதுரை வைகை ஆற்றில் திடீரென ஆளுயரத்திற்கு நுரை பொங்கி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வைகை ஆற்றில் மழைநீர் வரத்து சற்று அதிகரித்தது. நேற்றிரவு முதல் மழைநீர் வைகையில் ஓடி கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. யானைக்கல் பகுதியிலுள்ள தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படாமல் நீரில் நுரை பொங்கி நிற்கிறது

அதே போல் செல்லூர் மற்றும் மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள வைகையில் ஆளுயுர அளவுக்கு நுரை பொங்கி நின்றது. இதை மிகுந்த ஆச்சரியத்துடன் மக்கள் பார்த்தனர். இதை கேள்விப்பட்டு சுற்றுவட்டார பகுதி மக்கள் வைகையாற்று பகுதியில் குவிந்தனர்.இதையடுத்து தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி நுரையை கலைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அதிகளவு சாக்கடை நீர் கலப்பதால் நுரை பொங்கியதா அல்லது ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் கலந்ததால் நுரை பொங்கியதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

Tags : governor ,Vaigai ,Madurai , வைகையாறு, நின்ற, நுரை, மதுரை
× RELATED மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்...