திருவாலங்காடு ஒன்றிய குழு கூட்டம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமையில் நடந்தது. இதில் ஒன்றிய துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம் ஒன்றிய ஆணையர்கள் அருள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கிருஷ்ணன் ஒன்றியத்தின் வரவு செலவு கணக்குகளை வாசிப்பு செய்தார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன் கலந்து கொண்டார்.  

திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக 3 கோடியே 57 லட்சத்து 9 ஆயிரத்து 121 ரூபாய்க்கு பணிகள் நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஜெயபாரதி தினகரன், ஒன்றிய பொறியாளர் சுந்தரம், மருத்துவ அலுவலர் ஜெய உள்பட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

Related Stories:

>