பெரும்பேடு அணைக்கட்டு பகுதியை கலெக்டர் ஆய்வு

பொன்னேரி: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரிய மனோபுரம், பெரும்பேடு குப்பம், ஏ.ரெட்டி பாளையம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பிச்சாட்டூர் அணையில் இருந்து 7600 கன அடி வினாடிக்கு ஆற்றில் உபரிநீர் வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் தண்ணீர் புகாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனை நேற்று மதியம் கலெக்டர் பொன்னையா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அதிகாரி முத்துசாமி, பொன்னேரி ஆர்டிஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பானு பிரசாத், கிருஷ்ணபிரியா வினோத் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>