×

தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து வழக்கு: மத்திய உள்துறை அமைச்சருக்கு நோட்டீஸ்

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி எம்பி சு.வெங்கடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிஆர்பிஎப்பில் பி மற்றும் சி பிரிவுகளில் 780 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான 9 தேர்வு மையங்களில் வட மாநிலங்களில் 5ம், தென் மாநிலங்களில் 2ம், மேற்கு மற்றும் கிழக்கு பகுதிக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், தமிழகம் மற்றும், புதுச்சேரியில் தேர்வு மையம் இல்லை. எனவே, இங்கு ஒரு மையமாவது அமைக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கும், சிஆர்பிஎப் பொது இயக்குனருக்கும் கடிதம் எழுதினேன்.இதற்கு சிஆர்பிஎப் டிஐஜி (ரெக்ரூட்மென்ட்) மனோஜ் தியானி அளித்த பதிலில், ‘பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்’ என குறிப்பிட்டிருந்தார். மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுதிய பதில் கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் என்னால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை. மத்தியமைச்சர் ஒருவரின் பதில் இந்தியில் இருப்பது என்பது சட்டத்தையும், நடைமுறையையும் மீறிய செயலாகும். இதை ஆட்சேபித்து நான் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் இல்லை.

 இதே நிலை தமிழக எம்பிகள் குறைகளை சுட்டிகாட்டும் கடிதங்களுக்கு இந்தியில் மட்டும் பதிலளிக்கும் நடைமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. இது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது. இந்தி பேசாத எம்பிக்கள் மற்றும் மக்களின் உரிமையை மீறுவதாகும். இந்தியை அலுவல் மொழியாக கொள்ளாத மாநிலங்களில் அலுவல் மொழியாக ஆங்கிலத்தை தான் பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் இதுவரை இந்தியை அலுவல் மொழியாக ஏற்கவில்லை. தமிழும், ஆங்கிலமும் அதிகாரப் பூர்வமாக உள்ளது. எனவே, தமிழக அரசு, தமிழக எம்பிக்கள் மற்றும் தமிழக மக்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக் கூடாது என்றும் ஆங்கிலத்தில் எழுதவும், மத்திய அமைச்சர் எனக்கு இந்தியில் எழுதிய கடிதத்தை ஆங்கிலத்தில் தரவும், இதை மீறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்ைக எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர், மத்திய அலுவல் மொழித்துறை இணைச் செயலர், சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 8க்கு தள்ளி வைத்தனர்.


Tags : MPs ,Tamil Nadu ,Home Minister ,Union , In Hindi for Tamil Nadu MPs Case against respondent: Notice to the Union Home Minister
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...