அரசு இசை பள்ளிக்கு எஸ்.பி.பி பெயர்

நெல்லூரில் உள்ள அரசு இசை பள்ளிக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரது திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக நெல்லூரில் உள்ள அரசு இசை, நடனம் பள்ளிக்கு, டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்ய ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண், ஆந்திர அரசுக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>