நண்பர்களுடன் மீன் பிடித்தபோது கால்வாயில் தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி

பெரம்பூர்: கொடுங்கையூர் சின்னாண்டி  மடம் பகுதியை சேர்ந்த லோகேஷ் மகன் முகேஷ் (9). இவனது தாய்  பிரிந்து தனியாக வசிக்கிறார். தந்தையும் இறந்துவிட, முகேஷ் அதே பகுதியில் உள்ள தனது தாத்தா முருகன் வீட்டில் தங்கி, 5ம் வகுப்பு படித்து வந்தான்.கனமழை காரணமாக கொடுங்கையூர் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், நேற்றுசிறுவன் நண்பர்களுடன் அதில் மீன்பிடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது, எதிர்பாராத விதமாக தடுமாறி கால்வாயில் விழுந்ததால் நீரில் அடித்து செல்லப்பட்டான்.தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 2 ரப்பர் படகுகளில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.2 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவனை மீட்டனர். உடனடியாக போலீசாரின் வாகனத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Related Stories:

>