டிசம்பர் 4ம் தேதி முதல் ‘தேஜஸ்’ நேரம் மாற்றம்

மதுரை: வரும் 4ம் தேதி முதல்  சென்னை - மதுரை  தேஜஸ் சிறப்பு ரயில் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.டிசம்பர் 4ம் தேதி முதல் சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் 02613)   சென்னை எழும்பூரில் இருந்து தற்போதைய  காலை  6.30 மணிக்கு பதிலாக முன்னதாக காலை 6.00 மணிக்கே புறப்படும். திருச்சியில் இருந்து 10 மணிக்கும், கொடை ரோட்டில் இருந்து 11.20 மணிக்கும் புறப்பட்டு, நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் டிச. 4 முதல் மதுரை - சென்னை தேஜஸ் சிறப்பு ரயில்  (வண்டி எண் 02614 ) தற்போதைய மாலை  3.15 மணிக்கு பதிலாக முன்னதாக மாலை 3.00 மணிக்கே புறப்படும். கொடைரோட்டில் இருந்து மாலை 3.30 மணிக்கும், திருச்சியிலிருந்து மாலை  5.05 மணிக்கும் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories:

>