மருத்துவக்கல்லூரியில் இடத்தை ஒதுக்கி கொடுங்கள் மாணவர்களின் கட்டணத்தை ஏற்க திமுக தயாராக இருக்கிறது: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்கு சென்றுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவானி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாக தகவல் வந்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி திமுக அந்த கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜ கூட்டணிக்கு நேரத்தை செலவிட்ட முதல்வர்மருத்துவர்களுக்கு  இடஒதுக்கீட்டில்துளிகூடக் கவனம் செலுத்தவில்லைதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தமிழக மாணவர்களின் கனவினை சிதைத்த மத்திய பாஜ அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பாஜ அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத  இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாஜ அரசின் இந்த சமூகநீதி துரோகத்திற்கு துணை போகும் வகையில்-பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த இடஒதுக்கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, அரசு அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.

பாஜவுடன் கூட்டணி வைப்பதற்காக அரசு விழா நடத்துவதிலும்-அதற்கான விளம்பரங்களிலும் நேரத்தை செலவிட்ட முதல்வர் பழனிசாமி, மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் துளி கூடக் கவனம் செலுத்தவில்லை. போராடி பெற்ற சமூகநீதியின் பயன்  இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாக துரோகம் செய்த முதல்வர் பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ. அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>