சென்னை பேராசிரியைக்கு ரயிலில் பாலியல் தொல்லை: முதியவர் கைது

கோவை: சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை, கோவையில் உள்ள உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்றபோது அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் அந்த பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கூச்சலிட்டார்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த முதியவருக்கு தர்மஅடி கொடுத்து காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>