நிலக்கோட்டை அருகே டீக்கடையில் எஸ்ஐ வாங்கிய பருப்பு வடையில் பிளேடு

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி காவல்நிலையத்தில் எஸ்ஐயாக இருப்பவர் கனகராஜ். இவர் நேற்று நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்புள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு வடைகளை பார்சல் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து ஒரு பருப்பு வடையை சாப்பிட முயன்றார். அப்போது வடையில் ஒரு முழு பிளேடு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியைடைந்த கனகராஜ் உடனே இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் செய்தார். நிலக்கோட்டை தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் சம்பந்தப்பட்ட டீ கடைக்கு சென்று ஆய்வு செய்து, உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார். மேலும் அங்கு வடை தயாரிக்க பயன்படுத்திய மாவு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.

Related Stories:

>