அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தினால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு சென்று பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு சென்று பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாரம்தோறும் சனிக்கிழமை அன்று அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை அறியவும், சந்தேகங்களை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நூலகங்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் தேவையான புத்தகங்கள் வாங்க நிதி வழங்கப்பட்டுள்ளது. 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரோனாவுக்கு பின்னர் பள்ளி ஆரம்பிக்கும்போது இடைநிற்றலை தடுக்க மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து ஆய்வு செய்த பின்  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories:

>