×

நவ. 30 முதல் 4 கட்டங்களாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மின்வாரிய தலைவர் சந்திப்பு

சென்னை: தொழிற்சங்க நிர்வாகிகளை நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 4 கட்டங்களாக மின்வாரிய தலைவர் சந்திக்க முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளார்.
 தமிழக மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை, துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளை தனியார் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதுகுறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், கோரிக்கைகளை எடுத்துக் கூற வரும் அவர்களை மின்வாரிய தலைவர் சந்திப்பதில்லை எனவும் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த வாரம் மின்வாரியத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளும், அண்ணா சாலையில் உள்ள தலைமையகத்தில் ஒன்று கூடினர்.

அப்போது, மின்வாரிய தலைவர் அங்கு இல்லாததால், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இணை மேலாண்மை இயக்குநர் மின்வாரிய தலைவர் தங்களை சந்திக்க ஒப்புதல் அளித்ததாக கூறிய பிறகே அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 4 கட்டங்களாக அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளையும் மின்வாரிய தலைவர் சந்திக்க உள்ளார். சென்னை மின்வாரியத் தலைமையகத்தில் நடைபெறும் இந்த சந்திப்புக்குப் பிறகு பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Tags : union executives ,Electricity board meeting , With union executives Meeting with the Chairman of the Electricity Board
× RELATED சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்