வி.பி.சிங் நினைவு நாளில் சமூகநீதியை காப்போம்: மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

சென்னை: வி.பி.சிங் நினைவு நாளில், சமூக நீதியை காப்போம் என்று முகநூல் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு: சமூகநீதி காவலர் வி.பி.சிங் நினைவுநாள் இன்று.

உயர் வகுப்பில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் சிந்தித்தவர், உழைத்தவர் அவர். தமிழ் மண்ணின் சமூக நீதியை அகில இந்தியாவுக்கும் பரவலாக்கியவர். அவர் நினைவு நாளில், சமூக நீதியை காப்போம். அனைத்து துறையிலும் இடஒதுக்கீடு என்ற இலக்கை அடைய சபதம் ஏற்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>