அன்புமணி மீதான அவதூறு வழக்கை அரசு திரும்பபெற்றது

சென்னை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு எதிராக அவதுாறு கருத்து தெரிவித்ததாக  பாமக இளைஞர்  அணி தலைவர்அன்புமணி மீது அவதூறு வழக்கை அரசு தொடர்ந்திருந்தது. இந்த இரண்டு வழக்குகளும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில்,  வழக்குகளை திரும்ப பெறுவதற்கான மனுவை, தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்ரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனைவிசாரித்த நீதிபதி கே.ரவி, அன்புமணி மீதான வழக்குகளை திரும்ப பெற உத்தரவிட்டார்.

Related Stories:

>