காரியக் குழு கூட்டத்தில் தீர்மானம் அகமது படேல், கோகாய் மறைவுக்கு காங். இரங்கல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரும், எம்பி.யுமான அகமது படேல், அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் ஆகியோர் கொரோனா தொற்றால் சமீபத்தில் முன் இறந்தனர். அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நேற்று காங்கிரஸ் காரியக்குழு கூட்டம் நடந்தது. காணொலி மூலம் நடந்த இதில், தருண் கோகாய் மற்றும் அகமது படேலின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், `நீண்ட நாள் எம்பி.யும் கட்சியின் பொருளாளருமான அகமது படேலின் தீடீர் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கட்சியின் ஒரு அங்கமாக 40 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர், அனைத்து இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர், காங்கிரஸ் காரியக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவரின் தனிச் செயலாளர், பொருளாளர் என பல பொறுப்புகளில் பணியாற்றியவர்,’ என கூறப்பட்டுள்ளது.தருண் கோகாய் குறித்த இரங்கலில், `தருண் கோகாய் மறைவுக்கு காங்கிரஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. 40 ஆண்டுகளாக கட்சியின் சிறந்த தலைவர்களில் ஒருவராக, 6 முறை எம்பி, மத்திய அமைச்சர், அசாம் மாநில காங்கிரஸ் தலைவர், 3 முறை அசாம் முதல்வர் என்று கட்சிக்கு பெருமை சேர்த்தவர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>