×

கனமழையால் மண்சரிவு: திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசிக்க அலிபிரி வழியாக ஒரு பாதையும், சீனிவாசமங்காபுரம் வழியாக ஸ்ரீவாரி மெட்டு எனப்படும் மற்றொரு பாதையும் உள்ளது. அலிபிரியை விட குறைந்த படிக்கட்டுக்கள் கொண்டது ஸ்ரீவாரி மெட்டு. இவ்வழியாக சுமார் 1 மணி முதல் 1.30 மணி நேரத்திற்குள் மலையேறி ஏழுமலையானை தரிசிக்கலாம். இப்பாதை வழியாக தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று வருவார்கள். ஆனால் அந்த பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதால் அடிக்கடி தேவஸ்தானம் மூடிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதி வனப்பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழைக்காரணமாக திருமலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் வாரிமெட்டு பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக ஸ்ரீவாரிமெட்டு பாதையை தற்காலிகமாக மூடுவதாக தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது. மீண்டும் சாதாரண நிலை ஏற்பட்ட பிறகு இந்த மலைப்பாதை திறக்க அனுமதிக்கப்படும் எனவும், அதுவரை பாதயாத்திரை பக்தர்கள் அலிபிரி மலைப்பாதை வழியாக சென்று சுவாமியை தரிசிக்கலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags : hill road closure ,Tirupati Sreevari Mettu , Tirupati
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...