வால்பாறையில் அட்டகாசம்: கோழிகளை விரட்டி பிடித்து வேட்டையாடிய சிறுத்தை

வால்பாறை: வால்பாறையில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம் தொடர்வதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் அருள் என்பவர் வீட்டின் முன்பு நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று நாயை விரட்டும் காட்சியும், அதன்பின் குட்டியுடன் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான காட்சி சி.சி.டிவி. கேமராவில் பதிவாகி உள்ளது.

நேற்று முன்தினமும் இதேபோல வால்பாறை டவுனில் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோழிகளை சிறுத்தை விரட்டி பிடித்து வேட்டையாடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories:

>