முதல்வரின் நடவடிக்கைகளால் புயல் பாதிப்பு இல்லாமல் போனது : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

ஆத்தூர்,:முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் புயல்பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.சேலத்தை அடுத்த ஆத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று ) நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் புயல் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புயல் நேரத்தில் முதல்வர் களத்தில் இறங்கி பணியாற்றி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். எம்ஜிஆரின் வரலாறு தற்போது திரும்பியிருக்கிறது. அடையாறில் வெள்ளம் சூழ்ந்து விடாமலிருக்க செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிறிது சிறிதாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மருந்து, உணவு தரப்பட்டுள்ளது. முதல்வரின் நடவடிக்கையால் மிகப்பெரிய புயல் ஒன்றும் இல்லாமல் போனது. அதிமுக அரசு மக்களை பாதுகாக்கும் அரசு. மக்களை காக்கும் அரசு. முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று பார்வையிட்டார். இதனால் அனைவரின் கவனமும் முதல்வரின் மீது திரும்பியது. தமிழகம் இயல்பான தலைவர்களைத்தான் எதிர்பார்க்கிறது. நேர்மையான, எளிமையான தலைவராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>