லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது என்று ஐகோர்ட் மறுப்பு

சென்னை: லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இரு வங்கிகள் இணைப்பு முடிவு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எடுத்ததாகும் ய என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் நலனை டி.பி.எஸ் வங்கி பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எல்.வி.பி - டி.பி.எஸ் வங்கி இணைப்புக்கு தடை விதிக்குமாறு ஏ.யு.எம் நிறுவனம் எடுத்த கோரிக்கையை நிராகரித்தது. வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வு உத்தரவிட்டது.

கரூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மாதத்திற்கு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என அறிவித்தது. மேலும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

Related Stories:

>