×

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

சென்னை: நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை பொது பிரிவுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறும். நிவர் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலந்தாய்வு நடைபெறும்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான பொது கலந்தாய்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்றது. நிவர் புயல் காரணமாக கடந்த 25, 26 தேதிகளில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. புதிய மாற்றியமைக்கப்பட்ட தேதிகள் தற்போது மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி 30ஆம் தேதி கட்ஆப் மதிப்பெண் பொது பிரிவு 362 முதல் 492 வரை இருப்பவர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளனர். நீட் மதிப்பெண் 630 முதல் 622 வரை பெற்றவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒவ்வொரு தேதிகளுக்கான கலந்தாய்வுக்கான நீட் மதிப்பெண் குறித்த விவரங்களும் மருத்துவ கல்வி இயக்குனராக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

Tags : consultation ,storm ,Nivar , Medical consultation
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...